நாட்டில் புதிய திட்டங்களையோ, தொழிற்சாலைகளை திமுக எதிர்க்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காணொலி காட்சி கருத்தரங்கில் பேசிய அவர், நாட்டில் தற்போது ஏராளமான தொழிற்சாலைகள் உருவாவதாகவும், புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாகவும், அந்தத் திட்டங்களையோ, தொழிற்சாலைகளையோ திமுக எதிர்க்கவில்லை எனவும், ஆனால் அப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகள், திட்டங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக இருக்கக் கூடாது என்றார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும், ஆதலால்தான் அதை எதிர்ப்பதாகவும் கூறிய மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதற்கு எதிராக திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள் என்றார்.