தமிழகத்தில் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட அப்போக்குவரத்தை மீண்டும் தொடங்க தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பேருந்து நிலைய முன்பதிவு மையங்களில் மக்கள் காத்திருந்து முன்பதிவு செய்கின்றனர். https://www.tnstc.in/home.html இணைய தளத்திலும் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
முதல்கட்டமாக 400 குளிர்சாதன வசதியில்லாத பேருந்துகளை இயக்கவும், அதில் ஒவ்வொன்றிலும் 25 பயணிகளை மட்டும் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.