பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன், ஆப்லைன் என இரு முறைகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எந்தெந்த மாணவர்களுக்கு எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பழகன் மேலும் தெரிவித்தார்.