திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது.
திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுக்குழு உறுபினர்களை ஒருங்கிணைந்து அங்கிருந்து காணொலி காட்சி மூலமாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.