செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
கடந்த மாதம் 29 ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, ரேஷன் கடைகளில் இன்று முதல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அட்டைதாரர்களுக்கு டோக்கன்களில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும் என்றும், சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.