அரியர் மாணவர்கள் அனைவருக்கும் முந்தைய தேர்வு முடிவுகளுக்கு பதில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதுடன், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரியர் மாணவர்களில், பெரும்பாலானவர்கள் முந்தைய தேர்வுகளிலும் தோல்வி அடைந்துள்ளதால், அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படும் என்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அரசிடம் கருத்துருக்களை முன்வைத்திருந்தனர்.
எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் தேவைப்பட்டால் அவர்கள் அடுத்து நடைபெறும் செமஸ்டரை எழுதலாம் என்று அறிவிக்கவும் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.