விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது.
சேலம் மாநகர், அஸ்தம்பட்டி, 4 ரோடு, அழகாபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதேபோல் மதுரை, கடலூர், திருச்சி துறையூர், புதுச்சேரி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களிலும் பரவலாக மழை பெய்தது.