தமிழக அமைச்சர்களின் பேச்சு அதிமுக - பா.ஜ.க. இடையிலான கூட்டணியை முறிக்க வழிவகுக்க கூடாது என பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், டிசம்பர் மாதத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.
முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.