நாளை முதல் வணிக வளாகங்கள், சினிமா படப்பிடிப்புகள், பொது பூங்காக்கள் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தனித்தனியே விரிவாக வெளியிட்டுள்ளது.
அதன்படி கிருமி நாசினி தெளித்தல், ஹேண்ட் சானிட்டைசர் பயன்பாடு, 6 அடி தனிமனித இடைவெளி, உடல்வெப்ப பரிசோதனை, அறிகுறி உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு, முகக் கவசம் அணிவது கட்டாயம்.
சினிமா ஷூட்டிங்கை பொறுத்தவரையில் படப்பிடிப்பு தளங்களில் மொத்தம் 75 பேர் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும், படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது, கேமரா முன்னால் நடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஏசி பயன்படுத்தினால் வெப்பநிலை அளவு 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் இருக்க வேண்டும், காற்றோட்டமும் அவசியம்.