ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாமிடம் பிடித்துள்ளது.
ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் (Niti Aayog's) Export Preparedness Index 2020 ) வெளியிட்டிருப்பதாகவும், அதில் குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3ஆவது இடத்திலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தேசிய அளவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 46 சதவீதமும், எலெக்ட்ரானிக் மற்றும் ஆடை ஏற்றுமதியில் 19 சதவீத பங்கையும் தமிழகம் கொண்டிருப்பதாகவும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.