கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனை ஐ.சி.எம்.ஆர்-ன் அறிவுறுத்தல்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனைகளில் அடுத்த வாரம் முதல் துவங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய அவர், வைரஸ் தொற்றின் ஆபத்தை உணராமல் பெரும்பாலானோர் வதந்திகளை நம்பி பரிசோதனை செய்வதை தவிர்கின்றனர் என்றார்.
நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின் உயிரை காப்பாற்றுவது கடினம் என்பதால் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூக இடைவேளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்காமல் இருப்பவர்கள் மீது அதிகபடியான அபராதம் விதிப்பது, 3 மாத சிறை போன்ற கடும் நடவடிக்கைகள் அடங்கிய சட்டம் மிக விரைவில் அமலாகும் என தெரிவித்தார்.