திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் காவிரி உபரி நீரை பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 22 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட வளர்ச்சி திட்டபணிகள் மற்றும் கொரானா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினருடன் அவர் ஆய்வு நடத்தினார். சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 8 வகையான தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.