கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில், வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள இவர்களை ஜாமீனில் விடுவித்தால், மற்ற சாட்சிகளையும் மிரட்டக் கூடும் என அரசுத் தரப்பு வாதிட்டது.
நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும், மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுல்லை எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சயான், மனோஜ் இருவரையும் ஜாமீனில் விடுவிக்க மறுத்து அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.