கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28 ஆம் திறக்கப்படுகிறது.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 18 ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28 ஆம் தேதியும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அடுத்தகட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.