பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி. பி.சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி. பால சுப்பிரமணியம், சென்னை - அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து விளக்கம் அளித்த எஸ்.பி. பி. சரண்,தனது தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஆரோக்கியமாக உள்ளார் என்றும் தெரிவித்தார்.