பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேருக்கான ரேண்டம் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களுக்கான சமவாய்ப்பு எண்களை, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற உள்ள நிகழ்வில், அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து, அடுத்த மாதத்தில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.