தமிழகத்தில் இபாஸ் தளர்வு குறித்து தலைமைச் செயலர், ஆட்சியர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையிலும், இபாஸ் ரத்து குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல்படியும், முதலமைச்சர் தேவையான நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவார் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
முன்னதாக சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.