தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார்.
இ-பாஸ் முறையை ரத்து செய்யும்பட்சத்தில், மாவட்டங்களுக்குள் வரும் வெளி மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களை கண்காணிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.