தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் 58 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு உள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் யார் தவறு செய்தாலும் தப்பிக்க இயலாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவுத் துறை அலுவலக வளாகத்தை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில் இணையத்தால் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார்.