வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் அடுத்த 4 நாட்களில் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள்மாவட்டங்களான வேலூர், ரணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து, வரும் 23,24 25 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.