குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் இதன் அடையாளமாக இருந்த போதிலும், கொரோனா பரவி வருவதால் இந்தாண்டு கொண்டாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல் நலம் ஆகியவற்றை வழங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், விநாயக பெருமானின் திருவருளால் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகிlறேன் என தெரிவித்துள்ளார்.