தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவி நயினார், ராமாநதி மற்றும் கருப்பாநதி அணைகள் இன்று திறக்கப்படுகின்றன.
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கார் சாகுபடிக்கு இன்று முதல் நவம்பர் 25ஆம்தேதி வரை 97 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த அணைகள் இன்று முதல் பாசனத்திற்காக திறக்கப்படுகின்றன.
இதன் மூலம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.