கோவை கருப்ப கவுண்டர் வீதியில் மர்ம நபர் ஒருவர் விநாயகர் சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விநாயகர் சிலை சேதமடைந்திருந்த கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர் ஒருவர் கம்பி போன்ற ஒன்றை வைத்து விநாயகர் சிலையை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜப்பன் என்ற முதியவரை பிடித்து பெரியகடை வீதி போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னதாக, தகவல் அறிந்து அங்கு குவிந்த இந்து முன்னனி அமைப்பினர், சேதமடைந்த சிலைக்கு பதிலாக புதிய விநாயகர் சிலையை நிறுவினர்.