கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு எனக் கூறினார்.