தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறுவது தவறு என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே குற்றவாளிகளை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நெல்லை வந்த டிஜிபி திரிபாதி, நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் காவலர்களுக்கும் பாதுகாப்பு உள்ளது, காவலர்கள் மூலம் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உள்ளது என்றார்.
மேலும் வெடிகுண்டு கலாச்சாரம் தற்போது குறைந்து வருவதாக கூறிய அவர், காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்துள்ளது என்றார்.