கோயம்புத்தூர் கல்யாண் ஜுவல்லர்ஸ் பணியாளர்களில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சமூக இடைவெளியின்றி பணியாற்றியது, தொற்று பரப்பியது என 2 பிரிவுகளின் கீழ் நகைக்கடை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள விற்பனையாளர் ஒருவருக்கு தொற்று பாதித்த நிலையில் மீதமிருந்த பணியாளர்கள் 90பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 51 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் புகாரில் கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் இக்கடைக்கு வந்து சென்றவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.