செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

' தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்'- எஸ்.பி.பி சரண்

Aug 15, 2020 03:21:27 PM

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாக அவரின் மகன் எஸ்.பி சரண் கூறியுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.. தற்போது 74 வயதான அவருக்குக் காய்ச்சல், சளி ஏற்பட்டதால் இந்த மாதம் 5 - ம் தேதி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். சோதனையில் அவருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் மட்டும் இருந்ததால் வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், வயோதிகம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறத் தொடங்கினார் எஸ்பிபி. இந்த நிலையில், எஸ்.பி.பி. சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று வரை நல்ல உடல் நலத்துடன் இருந்த எஸ்.பி. பியின் உடல்நிலை நேற்றிரவு முதல் மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது, உடல் நிலை மோசமாகியிருப்பதால் எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல் நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவரின் மகன் எஸ்.பி.பி. சரண் கூறியுள்ளார்.

''நேற்று மாலை முதல் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் சிரத்தையெடுத்து அவரை கவனித்து கொண்டு வருகின்றனர். கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. விரைவில் எஸ்.பி.பி.  பூர்ண குணமடைவார் '' என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். 

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சகோதரி எஸ்.பி. வசந்தா கூறுகையில்,''  எங்களின் நலம் விரும்பிகளின் பிரார்த்தனையுடனும், கடவுளின் கிருபையுடனும், என் சகோதரர் விரைவில் குணமடைவார்,கூடுதல் பலத்துடன் அவர் வீடு  வருவார்'' என்று கூறியுள்ளார்.


Advertisement
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்


Advertisement