சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தை நாளை நடத்த வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கவும், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் குடியரசு தினம் , தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கால் நாளை நடைபெற வேண்டிய கூட்டத்தை ஒத்திவைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆதலால் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவையில்லை என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் கே.எஸ். பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.