விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அதற்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வியோடு நெல்லையில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சிலை வடிவமைப்புத் தொழிலாளர்கள் முகாமிட்டு, பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் ஏராளமான விநாயகர் சிலைகளை தயார் செய்துள்ளனர்.
வட்டிக்குக் கடன் வாங்கி ஓராண்டு காலமாக இந்த சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் அவர்கள், ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகத்தால் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாகக் கூறுகின்றனர்.