கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 163 சதவீதம் அதிகரித்து விட்டதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை 228 சதவீதமும், இறப்பு விகிதம் 23 சதவீதமாகவும் எகிறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவி ஏறக்குறைய 7 மாதங்கள் கழித்து இப்போதுதான் தமிழகத்தில் இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை முதலமைச்சர் ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் என தெரிவித்துள்ள ஸ்டாலின், அரசை இனியும் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி தமிழக மக்களை கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.