முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
2021 முதலமைச்சர் வேட்பாளர் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செல்லூர் ராஜூ இவ்வாறு கூறியிருந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் சில தகவல்களை ட்வீட் செய்துள்ளார்.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும் இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம், எடப்பாடி பழனிசாமியை முன்னிருத்தி தளம் அமைப்போம், களம் கான்போம், வெற்றி கொள்வோம், 2021-ம் நமதே என ராஜேந்திர பாலாஜி பதிவிட்டுள்ளார்.