தமிழகத்தில் தொழில் துவங்க யார் முன் வந்தாலும், ஒற்றைச்சாளர முறையில் குறிப்பிட்ட காலத் திற்குள் அனுமதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் துவங்க முன்வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இ- பாஸ் ரத்து செய்யப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மக்களுக்கு எளிதில் இ- பாஸ் கிடைக்கும் வகையில் கூடுதலாக மாவட்டத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார்.
ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் - கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் செய்தியாளர் சந்திப்பின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.