ஞாயிற்றுக்கிழமை தளர்வற்ற முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 189 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது வகைகள் விற்று தீர்ந்துள்ளன. இன்று முழு ஊரடங்கை ஒட்டி மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்பதால், சனிக் கிழமையன்று முன்கூட்டியே குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.
அதனால் கடந்த 5 வாரங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 189 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44.55 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 41.67கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 41.20 கோடிக்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.
கோவையில் 39.45 கோடி ரூபாய்க்கும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் 22.56 கோடி ரூபாய்க்கும் மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.