தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
உள்தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகநகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.