புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ள அதேசமயம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் பிற அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.