திரைப்பட படப்பிடிப்பு நடத்தவும், திரையரங்கை திறக்கவும் தற்போதைக்கு அனுமதி வழங்கப்படாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திரைப்பட படப்பிடிப்பு வெளிபுறத்தில் நடைபெறும் என்பதால் தற்போதைக்கு அனுமதியளிக்க இயலாது, அதுகுறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றார்.