புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர், அதிகாரிகளுடன் அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் இதுகுறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.