செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தீவிரவாதிகளை கையாள்வதில் சிறப்பு பயிற்சி ... கேரள தங்கக்கடத்தல் கும்பலை கதறவிடும் வந்தனா ஐ.பி.எஸ்!

Aug 02, 2020 09:43:37 AM

கேரள மாநிலத்தில் தங்கக்கட்டத்தல் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் பெயரும் தங்கக்கடத்தல் விவகாரத்தில் அடிபடுகிறது. தங்கம் கடத்தியதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தங்கக்கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரியான கே.பி. வந்தனா ஐ.பி.எஸ். துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிவசங்கரன் திணறிப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி திறமையான அதிகாரிகளை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள விரும்புவார். என்.ஐ.ஏ தலைவர் அஜித் தோவல், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அதற்கு உதராணம். சமீபத்தில், தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதாவும் பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில் அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் பிரதமர் மோடி முக்கிய பதவி கொடுத்துள்ளது பலருக்கும் தெரியாத விஷயம். அந்த அதிகாரிதான் வந்தனா ஐ.பி.எஸ். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தேசிய புலனாய்வு  முகமையின் தென் மாநிலங்களுக்கான தலைவர் ஆவார்.

கடந்த 2004- ம் ஆண்டு பயிற்சியை முடித்த வந்தனா, ராஜஸ்தான் மாநில கேடர் அதிகாரியாக போலீஸ் துறையில் பணியை தொடங்கினார். அமெரிக்காவில் வடக்கு கரோலினாவிலுள்ள American Intelligence Training Academy - யில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதிலும் சிறப்பு பயிற்சி முடித்தவர். கடினமாக இந்த பயிற்சியை நிறைவு செய்த ஒரு சில பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். தற்போது, என்.ஐ.ஏ அமைப்பில் டி.ஐ.ஜி- யாக இருக்கும் வந்தனா தலைமையிலான அதிகாரிகள்தான் கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். வந்தனா ஐ.பி.எஸ் சென்னை விமான நிலையத்திலும் குடியுரிமை பிரிவில் பணியாற்றியுள்ளார்,

ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்தாக குற்றச்சாட்டுக்குள்ளான சிவசங்கரையும் இவர்தான் விசாரித்து வருகிறார். விசாரணையில் வந்தனா கேட்கும் நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிவசங்கரன் பரிதாபமாக விழித்தாக சொல்லப்படுகிறது. கேரளாவுக்கு தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிரியாவின் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வந்தனா ஐ.பி.எஸ் தலைமையிலான என்.ஐ.ஏ விசாரணைக்குழு நேற்று சென்னை வந்ததும் விசாரணை மேற்கொண்டது.


Advertisement
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement