கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே சிறுமியின் தாய் உட்பட 4 பேர் கைது செய்யபட்ட நிலையில், தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கபட்டன.
அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குட்டம் பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவரின் உதவியுடன் கடைகுளத்தில் உள்ள மருத்துவரின் காட்டு பங்களாவில் பதுங்கி இருந்த நாஞ்சில் முருகேசனை தனிப்படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நாஞ்சில் முருகேசன், நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.