கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டம் என்கிற யூ ட்யூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் முருகப்பெருமான் குறித்தும் ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் வாசன், சுரேந்திரன் நடராஜன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மற்றொரு நிர்வாகியான சுரேந்திரன் நடராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுரேந்திரன் நடராஜன் ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட இந்து தமிழர் பேரவை என்கிற அமைப்பைச் சேர்ந்த கோபால் என்பவன், மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் செயல்பட்டால் இது போன்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அதே வேளையில் கறுப்பர் கூட்டம் பின்னணியில் சில மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக பரப்பப்படும் தகவல் வதந்தி என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.