சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் ஐந்நூற்றுக்கு 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நாமக்கல் மாணவியைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நாமக்கல் லாரி ஓட்டுநர் நடராஜனின் மகள் கனிகா சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இதை மனத்தின் குரல் வானொலி உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் படிக்கும் மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கனிகாவின் சகோதரி ஷிவானி மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஏழைக் குடும்பத்தில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டுக்குத் தொண்டாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாணவி கனிகா, பிரதமரிடம் பேசியது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரது பேச்சு தமக்கு மேலும் ஊக்கமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.