சென்னையின் குடிநீர் தேவைக்கு பிரதானமாக விளங்கும் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஜூன் 21-ம் தேதி கடலூர் மாவட்ட கடமடை பகுதியான கீழணைக்கு வந்தடைந்தது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 485 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 59 கன அடியும், வி.என்.எஸ். மதகு வழியாக சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. தற்போது வீராணம் ஏரியில் 1465 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.