தமிழகத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் முன்னர் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த தேதிக்குப் பின்பு எப்போது தேதி அறிவித்தாலும் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக கூறினார். அதற்கேற்ப இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை துவங்கிவிட்டதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம், இல்லை வழக்கம் போல் படிவம் 7-ஐ நிரப்பி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கலாம் என்று, தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.