கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு தடையை மீறி நடிகர்கள் விமல், பரோட்டா சூரி உள்ளிட்டோர் செல்ல அனுமதி அளித்ததாக 3 தற்காலிக வனத்துறை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு வாரத்துக்கு முன்பு நடிகர்கள் விமல்,பரோட்டா சூரி அங்கு சென்று மீன் பிடித்த புகைபடங்கள் வெளியாகின.
இதுகுறித்து காவல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து விமல், பரோட்டா சூரிக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுசூழல் வன காவலர் சைமன், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு , அருண் ஆகியோரை கொடைக்கானல் வனத்துறை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.