தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில், சென்னையில் விடுபட்டிருந்த 444 பேரின் உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர் வடிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை மட்டும் சென்னையில் விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விடுபட்ட 444 மரணங்களையும் சேர்த்து, தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.