தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், அதிகபட்சமாக ஒரே நாளில் 4 ஆயிரத்து 985 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி, இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில், 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 70 பேர் பலியாயினர். சென்னையில் 93 வயது பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், திருவள்ளூரில் 25 வயது இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 551 ஆக உயர்ந்தது.
கொரோனா பரிசோதனை, ஒரே நாளில் சுமார் 52 ஆயிரமாக உயர்த்தப்பட்டதால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்தைத் தாண்டியது.
ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர், குணம் அடைந்ததால், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.
class="twitter-tweet">#TN #COVID19 Update:
Today/Total - 4,985 / 1,75,678
Active - 51,348
Discharged Today/Total - 3,861 / 1,21,776
Death Today/Total - 70 / 2,551
Samples Tested Today/Total - 52,087 / 19,84,579
For more info visit https://t.co/YJxHMQexUK@CMOTamilNadu @Vijayabaskarofl @MoHFW_INDIA