கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்களில் திருவிழாக்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தொன்று தொட்டு வரும் பழக்கவழக்கங்களுக்கு மாறுதல் இல்லாமல் கோயில் வளாகத்திற்குள் திருவிழாக்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சொற்ப அளவிலான பணியாளர்களை கொண்டு, முக்கவசம் அணிந்து, 6 அடி இடைவெளி விட்டு திருவிழாக்களை நடத்தலாம்.
திருவிழாக்களில் பக்தர்களும், உபயதாரர்களும் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசின் அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றுவதுடன், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற வேண்டியிருந்தால் அதையும் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாக்களை வலைதள நேரடி ஒளிபரப்பு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.