சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒரு பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் சிபிசிஐடி போலீசார் காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண் காவலர் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலமும் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலமும் முரண்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்தப் பெண் காவலருக்கு சம்மன் அனுப்பி மதுரை வரவழைத்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.