தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்டோர் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கவச உடை, முகக்கவசம், முகக் கண்ணாடி போன்றவற்றை அணிகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகள் உள்ளிட்டவை மருத்துவமனை நுழைவு வாயிலுக்கு அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் அலட்சியமாக போடப்பட்டு காட்சி அளித்தது. இதன் மூலம் பிறருக்கு தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.