தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில், 4 ஆயிரத்து 538 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61ஆயிரத் தை நெருங்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில், கொரோனாவுக்கு 79 பேர் உயிரிழந்தனர். சென்னை தனியார் மருத்துவமனையில் 92 வயது முதியவர் ஒருவரும் வைரஸ் தொற்றுக்கு பலி ஆனார். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 315ஆக உயர்ந்தது.
கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக ஒரே நாளில் 48 ஆயிரத்து 669ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 18 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப் பட்டு உள்ளன.
ஒரே நாளில் 3 ஆயிரத்து 391 பேருக்கு மேல் குணம் அடைந்ததால், கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சுமார் 48 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி இருந்தது.